சிறந்த நடிகைக்கான விருது நடிகை தமன்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கண்ணே கலைமானே திரைப்படத்தில் தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே படம் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது நடிகை தமன்னாவுக்கும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ரசிகர்கள் உதயநிதி, தமன்னா, சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.