இலங்கை தற்போது பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமானால் அது சர்வதேச நாணய நிதியத்தில் மாத்திரமே முடியும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை-லிந்துலை வட்டார தோட்ட கமிட்டி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.இதன்போது இவர் தெரிவிக்கையில் இலங்கை ஜனாதிபதி,பிரதமரின் எதேச்சையதிகாரமும் இராணுவ போக்குமே இந்நிலைக்கு நாடு போக காரணமாக அமைந்துள்ளது.
இதே நிலை தொடருமானால் நாட்டில் முன்னர் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த சூழலுக்கு செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும்.இதற்கு ஒரே தீர்வு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தோடு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.அப்படி ஒப்பந்தகள் செய்துகொள்ளும் பட்சத்தில் மனித உரிமைகள் மீட்கப்படும்,நாடு ராணுவமயமாகாமல் இருப்பதற்கு தீர்வு கிடைக்கும்,அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் பல உதவிகளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெறும்.இவ்விடயம் தெரிந்தும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை புறக்கணித்து வருகின்றனர்.இது நல்லதுக்கு அல்ல நாட்டிற்கு விடிவுகாலம் கிடைக்க வேண்டுமென்றால் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தப்பில்லை எனவும் ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்,அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் லில்லிப்பூ,மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் க.சிவஞானம் கலந்துக்கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்