சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பெண்களுக்கெதிரான வன்முறையினை ஒழிக்க பிரகடணம்.

0
205

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிக்க பிரகடணம் ஒன்றினை இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டதாக பிரிடோ நிறுவனத்தின் முகாமையாளர் கருணாகரன் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று 10 திகதி ஹட்டன ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் பிரடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …
கடந்த நவம்பர் மாதம் 25 தொடக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்பதற்காக தோட்டங்கள் தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.இதில் பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்பதற்கு ஆண்கள் முன் வர வேண்டும் அந்த பிரகடணத்தினை ஆண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல செயத்திட்டங்களை முன்னெடுத்தோம்.அதே போன்று இந்த நாட்டிக்கு அந்நியச் செலவாணியினை கொண்டு வருகின்ற பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்களின் துன்புறுத்தலையும் இல்லாதொழிக்க வேண்டும் அவ்வாறு இல்லாதொழிக்கு போது தான் நாட்டின் பொருளாதாரம் மேன்மையடையும் என்ற ஒரு தொனிப்பபொருளையும் முன் வைக்கயிருக்கின்றோம் அத்தோடு நுவரெலியா வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் ஒன்றின் கிளையினை திறக்க வேண்டும் என 50000 கையொப்பங்கள் திரட்டியிருக்கின்றோம் அதனையும் இன்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளதாகவும் பெருந்தோட்ட பகுதிகளில் மாத்திரமின்றி நாடு முழுவதில் வெளிநாடுகளுக்கு சென்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கு நாடு முழுவதும் பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்;.

இதன் போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நுவரெலியா மாவட்டத்தில் வெளிநாட்டு பணியகம் ஒன்றினை உருவாக்குதற்காக திரட்டப்பட்ட 50000 கையொப்பங்களையும் கையளிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாம் மொழி விருத்திற்காக மற்றும் சமூக சேவைக்காக செயப்பட்டவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இது குறித்த செயத்திட்ட அதிகாரி அமரச்செல்வம் அவர்களும் கருத்துரைத்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here