பிரான்ஸில் சலவை துணி மூட்டைகளோடு மூட்டையாக கிடந்த கைக்குழந்தை ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் Mainvilliers (Eure-et-Loir) நகரில் இடம்பெற்றுள்ளது.இங்குள்ள பூங்கா ஒன்றுக்கு அருகே உள்ள சலவை துணி போடும் தொட்டி ஒன்றுக்குள் கைக்குழந்தை ஒன்று இருப்பதை பார்த்த நபர் ஒருவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தை உடனடியாக மீட்டு, மருத்துவ குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.குழந்தை குறைந்தது நான்கைந்து நாட்கள் குறித்த துணி மூட்டைகளுடன் இருந்துள்ளமைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் முதல்கட்டமாக மரபணு சோதனைகளை (DNA) மேற்கொண்டுள்ளனர்.