சவப்பெட்டி ஏந்தியும் மண்னெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

0
218

 

பெறுந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் என கோரி பொகவந்தலாவ டின்சின் மற்றும் பொகவந்தாவ கெம்பியன் நகர பகுதிகளிலும் பாரிய ஆர்பாட்டம் ஒன்று 23.10.2018செவ்வாய்கிழமை
முன்னனெடுக்கபட்டது

இந்த ஆரபாட்டத்தின் போது பொகவந்தலாவ கெம்பியன் நகரில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தில் 12தோட்டபகுதிகளை சேர்ந்த 2000க்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு பொகவந்தலாவ டின்சின் நகரில் இடம் பெற்ற
ஆர்பாட்டத்தின் போது நான்கு தோட்டபகுதிகளை சேர்நத 600கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

இதன் போது சவப்பெட்டி ஏந்தி கொடும்பாவி எறித்தும் மண்னெண்ணையை தமது உடம்பில் ஊற்றி தீ குளிக்கவும் இன்றைய ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டகாரர்கள் முயற்சி செய்தனர்.

தோட்ட தொழிலாளர்களாகிய எங்களை இலங்கை நாட்டின் பிரதான ஏற்றுமதி பொருளாக இன்று நாங்கள் பறிக்கும் தேயிலை விளங்குகின்ற போது ஏன் எங்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க இந்த தோட்டகம்பணி காரர்கள் மறுப்பு
தெரிவிக்கின்றனர். ஆனால் வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் இந்த நாட்டுக்கு என்ன இலாபத்தை பெற்று கொடுக்கிறார்கள் ஆகவே தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் எனவும் ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

DSC06111 DSC06131 DSC06123

மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கபட வேண்டும் என கோரி வடகிழக்கு மக்கள் லண்டன் சிங்கபூர் போன்ற வெளிநாடுகளில் தமிழ் உறவுகளும் இம்முறை இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு
ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் என கோரி எங்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வாறு வெளிநாடுகளில் உள்ள உறவுகள் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா பெற்று கொடுக்கபட
வேண்டும் என வழியுருத்துகின்ற போதும் ஏன் இந்த தோட்டங்களை நடாத்துகின்ற கம்பணிகாரர்கள் ஏன் எங்களுக்கான சம்பளத்தை அதிகரித்து கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்

எங்களால் பறிக்கபடுகின்ற தேயிலை கூட ஒரு நல்ல தேனீராக அருந்து வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை நல்லதேயிலையினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை தேடிகொள்ளும் ஜனாதிபதி மைத்திறீபால சிறிசேன
மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இனைந்து தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று கொடுக்கபட வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here