ஹட்டன் டிக்கோயா நகரசபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள எந்த ஒரு பிரச்சினைகள் தொடர்பாக முறைபாடுகள் செய்தால் அதற்கு எந்த வித தீர்வும் பெற்றுக்கொடுப்பதில்லை பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாதாரண பிரச்சினை ஒன்றினை தீர்த்து கொள்ள வேண்டுமானால் கூட நீதி மன்றம் சென்று தீர்க்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை உருவாகியிருப்பாதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் டிக்கோயா நகர பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. முறையாக குப்பைகள் அகற்றாமை கழிவு நீர் பிரச்சினை நடைபாதை பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது குறித்து உரிய அதிகாரிகளும்,அரசியல் தலைவர்களும் அசமந்த போக்கில் இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்விகள் கேட்டால் கூட அவற்றிக்கும் எவ்வித பதிலும் வழங்குவதில்லை. அங்கு பணிபுரிய ஒரு சில அதிகாரிகள் தன்னிச்சையாகவே செயப்படுவதாகவும் எனவே இது குறித்து பொறுப்பாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹட்டன் நகரில் பொது மக்கள் பயன்படுத்தப்படுகின்ற பஸ் தரிப்பு நிலையம் பல ஹட்டன் ஹைலன்ஸ் பிரதான வீதி .இந்து மா சபை வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் நிறை சூழல் மிக அசுத்தமான நிலையில் காணப்படுவதோடு நீர் வழிந்தோடுவதற்கு வழியின்றி மழை நேரங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாகவும் இதனை ஒவ்வொரு நாளும் குறித்த அதிகாரிகள் காணுகின்ற போதிலும் இந்த பிரச்சினைகள் குறித்த எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பொது மக்கள் பிரச்சினைகள் குறித்து அக்கறை செலுத்தும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்