சாந்திபுர கலாபுற பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் திறந்து வைப்பு.

0
203

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சாந்திபுர கலாபுற பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சனசமூக நிலையமானது இன்று 27 மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்கள் பதவியேற்று மூன்றாவது ஆண்டு ஆரம்ப தினத்தையொட்டி அவரது வழிகாட்டலின் கீழ் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த சனசமூக நிலையமானது நுவரெலியா பிரதேச சபையின் மூலம் சுமார் 35 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வேலைத் திட்டமாகும். மேலும் சனசமூகநிலையம் இரண்டு மாடி கட்டிடங்களை கொண்டதாகும்.

மேலும் இந்நிகழ்வை நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.ல்.டி. சரத் அவர்கள் ஏற்பாடு செய்தோடு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் உப தலைவர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பா.பாலேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here