புகையிரத சாரதிகள் பணிக்கு சமுகமளிக்காத காரணத்தால் இன்றும் (19) பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகளுக்கான பதவி உயர்வுப் பரீட்சை இன்று நடைபெறுவதால் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவிருந்த 28 புகையிரதங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட சாரதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத சாரதிகளை தரம் 2இலிருந்து தரம் 1க்கு பதவி உயர்த்துவதற்கான இப்பரீட்சையில் சுமார் 80 சாரதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.