சிஐடி வசமாகிறது  மஹிந்தவின் மாளிகை!

0
52

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகை, குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்களத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

மேற்படி சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், அது பற்றி சபைக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச வசிக்கும் விஜேராம மாவத்தை வீடு சிஐடிக்கு வழங்கப்படவுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் நேற்று வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘அமைச்சர்களுக்கு தற்போது அதிகாரப்பூர்வ வதிவிடங்கள் ஒதுக்கப்படவில்லை. 51 அதிகாரப்பூர்வ வதிவிடங்கள் உள்ளன. அவை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

அரசாங்க நிறுவனங்களை நடத்துவதற்கு சில இடங்கள் தேவைப்படுகின்றன.அதற்காக சில விதிவிடங்கள் பயன்படுத்தப்படும். சிஐடிக்கு இந்த வதிவிடம்தான், அந்த விதிவிடம்தான் என முடிவெடுக்கவில்லை. ஆனால் சிஐடிக்கு இடமொன்று கோரப்பட்டுள்ளது. இது பற்றி எதிர்காலத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here