பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
71 வயதான நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து குறித்த உயிரிழந்த நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
பதுளை பொது வைத்தியசாலையில் 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பதுளை வைத்தியசாலை 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.