‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு யார் காரணம்? – முருகதாஸ் தகவல்

0
11

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர்நடித்தனர். பிரம்மாண்ட ஆக் ஷன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம். ஒவ்வொரு இரவிலும் பகல் போல ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், கிராபிக்ஸில் எடுத்தால் எப்படி இருக்கும்? ஆனால் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது” எனக் கூறியுள்ளார். முருகதாஸின் இந்தக் கருத்து, சல்மான் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் செப்.5-ல் வெளியாகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here