சிக்கன் வாங்க பணம் தராததால் மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற கணவன்!

0
132

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மனைவியுடனான தகராறில் கத்தரிக்கோலால் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் பிரேம் நகர் காலனியைச் சேர்ந்தவர் ஷாஹித் ஹுசைன்.தையல்காரராக இவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று Fried Chicken வாங்க வேண்டும் என மனைவி நூர் பானோவிடம் (46) பணம் கேட்டுள்ளார்.

ஆனால், நூர் அவருக்கு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து நூர் வெளியே சென்று Chicken வாங்கி வந்துள்ளார். அதன் பின்னர் நூர் பானோவுக்கும், ஷாஹித்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷாஹித், கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.இதனால் ரத்த வெள்ளத்தில் நூர் சரிந்து விழுந்தார். இதனையடுத்து நூர் பானோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஷாஹித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here