இருண்ட யுகம் நோக்கி நகர்ந்த நாட்டின் ஆட்சிக்கட்டமைப்பை நல்லாட்சிக்கான அரசாங்கத்திற்கு வழிவகுத்து கடந்து சென்ற வருடத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மேலும் பல மாற்றங்களை முன்னோக்கி நகர்த்த நாட்டு மக்கள் அனைவரும் புதிய ஆண்டில் திடசங்கட்பம் கொள்ள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட தொழிற்ச்சங்கவாதியுமான சிங்.பொன்னையா தனது புத்தாண்டு வாழ்த்து
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த வருடம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்திருந்தாலும் பிறக்கவிருக்கும் வருடம் தமக்கு நலமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை மாத்திரமே எமது மக்களுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. தாங்கள் என்னதான்
புறக்கணிக்கப்பட்டாலும் ஒதுக்கப்பட்டாலும் கூட தமது தெய்வ நம்பிக்கை விருந்தோம்பல் தொழில் கடமைகள்; இவை எதிலுமே எமது மக்கள் நொந்துவிடுவதில்லை.
எல்லாம் வல்ல இறைவன் எமது மக்களுக்கு வழங்கியுள்ள திடமான மனநிலையும் கிடைத்ததை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பும் தொடந்தும் கிடைக்க வேண்டுமெனவும். கடந்து சென்ற வருடத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மேலும் பல மாற்றங்களை முன்னோக்கி நகர்த்த நாட்டு மக்கள் அனைவரும் புதிய ஆண்டில் திடசங்கட்பம் கொள்ள
வேண்டும். எதிர்வரும் காலங்களை நாமே சிறப்பாக்கிக் கொள்ளும் மன உறுதியை எமது சமூகம் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்