இலங்கையில் அதிகமான மக்கள் செலுத்திக் கொண்ட சினோபாம் தடுப்பூசி தொடர்பில் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜயசுமன முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.சீனாவின் தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் செயல்திறன் 3 மாதங்களில் குறைந்து விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறைய 6 மாதங்களாகும். எனினும் அதிகமான இலங்கையர்களுக்கு சினோபாம் தடுப்பூசியே செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் 3 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களில் எத்தனை பேர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளார்கள் என்பதனை அடிப்படியாக கொண்டே ஒமிக்ரோன் வைரஸ் இலங்கையில் எவ்வாறு பாதிக்கும் என்பது தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.