சிம்பு நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’அரசன்’ படத்தினை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகின்றன.




