மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் – இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது பெயில் – இந்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜவான் திரைப்படத்தை தமிழ்நாட்டை சேர்ந்த அட்லீ இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி (மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே – இந்தி திரைப்படம்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங் – தமிழ் திரைப்படம்), விஜயராகவன் (பூக்காலம் – மலையாள திரைப்படம்), சிறந்த துணை நடிகையாக ஊர்வசி (உள்ளொழுக்கு – மலையாள திரைப்படம்), ஜான்சி போடிவாலா (வாஸ் குஜராத்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது சுதிப்தோ சென்னுக்கு (தி கேரளா ஸ்டோரி – இந்தி திரைப்படம்) வழங்கப்பட்டுள்ளது.