சிறப்பான கிராமசேவகரும்,அபிவிருத்தி உத்தியோகத்தரும் இன்மையால் பொது மக்கள் அல்லல் படுகின்றன.

0
198
சிறப்பான கிராமசேவகரும்,அபிவிருத்தி உத்தியோகத்தரும் இன்மையால் பொது மக்கள் அல்லல் படுகின்றன.
——–டி.சந்ரு——————————–
எந்த நேரத்திலும் கிரிமெட்டிய கிராம அலுவலர் பிரிவு 476A பூட்டிய வண்ணமே காணப்படுகிறது இதனால் கர்லிபெக், தம்பகஸ்தலாவ, எவோக்கா , கிரிமெட்டிய, டெஸ்போர்ட்B, டெஸ்போர்ட்A ஆகிய 6 தோட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்பெற்று வந்த கிராமசேவகர் காரியாலயம் எந்த நேரத்திலும் பூட்டிய வண்ணமே இருக்கின்றது ஆனாலும் கடந்த காலங்களில் சேவை ஆற்றிய கிராம அலுவலர்கள் கிராமத்திற்கு பல்வேறு வகையான சேவைகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் புதிதாக வருகை தந்திருக்கும் கிராமசேவகர்கள் மஸ்கெளியா பிரதேசத்தில் இருந்து வருகை தருவதால் அவர் நேரத்திற்கு காரியாலயத்திற்கு சமூகமளிப்பதும் இல்லை மற்றும் அவர் காரியாலயத்திற்கு சமூகமளித்தாலும் சுமார் ஒரு மணித்தியாலயம் மாத்திரமே காரியாலயத்தில் கடமை புரிகின்றார் அந்த நேரத்தில் அப்பிரதேச மக்களுக்கான வேலையை முறையாக செய்துகொள்ள முடியாமல் மிக பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்கின்றனர் அதுமட்டும் இல்லாமல் உரிய கிராமசேவகர் இரண்டு வசங்களை பார்ப்பதாக தகவல் , வெளியாகியுள்ளது.No photo description available.

அவரை சந்திப்பது என்றால் கிரிமெட்டியவில் இருந்து பெறக்கும்பரைக்கு செல்ல வேண்டும் என்று கிராம சேவகர்கள் துண்டுபிரசுரம் ஒன்றின் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளார் குறித்த கிராமசேவகர் இரண்டு வருடத்திற்கு மேலாக கிரிமெட்டிய கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றி வருகின்றார் இருந்தபோதிலும் எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தவிதமான சேவைகளையும் அவர் செய்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது குறித்த கிராமசேவகரிற்கு எதிராக நானுஓயா பொலிஸ் பிரிவில் பல்வேறு முறைப்பாடுகளும் காணப்படுகிறது காரணம் இவர் தகாத வார்த்தைகளால் பொது மக்களை திட்டுவதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கிரிமெட்டிய கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றிய கிராமசேவகர்கள் பல்வேறு நன்மைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர் இதுவரை மக்களுக்கான எதுவித சேவைகளையும் மேற்கொள்ளாமல் தனது தனிப்பட்ட வேலைகளை மேற்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே நுவரெலியா பிரதேச செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு …

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here