நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.
அது தொடர்பாக அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் விசாரணைகளை தடுக்கும் முயற்சியில் தனிப்பட்ட லாபம் கருதி சிறீதரன் செயற்பட்டுள்ளதாக சாமர தெரிவித்துள்ளார்.
சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பாகும்.
இந்த நிலையில், அது குறித்த நியமனங்களின் போது, தனக்கு எதிராக உள்ள முறைப்பாட்டை அரசியலமைப்பு சபைக்கு தெரிவிக்காமல் அதற்கான வாக்கை சிறீதரன் பயன்படுத்தியுள்ளதாக சாமர சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நாடாமன்ற உறுப்பினர் சிறீதரன் தனிப்பட்ட நலன் கருதி செயற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சிறீதரன் அரசியலமைப்புச் சபைக்குள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சி சார்பாக சாமர ஒரு முறையான முறைப்பாட்டை பதிவு செய்வதாக கூறியுள்ளார்.