சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குடும்பஸ்தர் கைது

0
125

யாழில் தனது மைத்துனியான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதுடன் , சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஸ்பிரயோகம் புரிய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனது மனைவியின் தங்கையான சிறுமியான மைத்துனியை குறித்த நபர் பாலியல்துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து , சிறுமி மயங்கிய நிலையில் இருந்த போது , தனது நண்பன் ஒருவரையும் சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த அனுமதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து , அவர்களால் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை ,சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து துஸ்பிரயோகத்துக்குட்படுத்தி குறித்த நபரின் நண்பர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையைகாவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here