தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் மற்றும் குறித்த சபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் 11.06.2018 அன்று நுவரெலியா நீதிமன்ற மாவட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 04.06.2018 அன்று தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் 05.06.2018 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இச்சம்பவத்தை 11.06.2018 அன்று விசாரணைக்கெடுத்த நுவரெலியா நீதிமன்ற மாவட்ட நீதவான் பிரமோத ஜெயசேகர சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடதக்கது.
டி.சந்ரு , க.கிஷாந்தன்