சிறுவர்களுக்கு இளையத்தளம் ஊடாக பாலியல் தொந்தரவு!! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
307

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் அதிகளவில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றமையினால் சிறுவர்களை பலர் பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றமை தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே இதிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கு பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து உடனடியாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here