சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கொட்டகலையில் போராட்டம்

0
163

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (25.07.2021) முன்னெடுக்கப்பட்டது.

மலையக பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் ப்ரொடெக்ட் சங்கம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பிவாறு குறித்த போராட்டத்தை நடத்தினர்.

அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் போராட்டகாரர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நாடு முழுவதும் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் பணி செய்யும் பகுதிகளில பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக ஹிஷாலினியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட வேண்டும் மேலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற தரகர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என போராட்டகாரர்கள் வலியுறுத்தினர்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here