தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தனது இன்றைய பிறந்த தினத்தை அட்டன் மாரநாதா சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களுடன் இணைந்து
அனுஷ்டித்தார்.
இந்தச் சிறுவர் நிலையத்தைச் சேர்ந்த சகல சிறுவர்களுக்கும் அந்த அந்தச் சிறுவர்களுடைய விருப்பத்திற்கேற்ற வகையில் புத்தாடைகளைப் பெற்றுக்கொடுத்த பழனி திகாம்பரம் அந்தச் சிறுவர்களை விருந்தகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மதிய போசனம் வழங்கி அந்த சிறுவர்களை மகிழ்வித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன்,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்