சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு!

0
9

நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நாட்களுக்குப் பதிலாக ஏனைய நாட்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம்; 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற இந்த கண்காட்சி 16 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.இதற்கமைய, கண்காட்சியின் ஆரம்ப தினம் பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரையிலும், ஏனைய நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 5.30 வரையிலும் புத்தரின் புனித தந்ததாது பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here