கொரோனா தொற்று பரவல் காரணமாக பூட்டப்பட்ட பாடசாலைகள் நான்கு கட்டங்களாக திறப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்திருந்தன. இந்நிலையில் 200 இற்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பாடசாலைகள் இன்று (21) திகதி திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் காரணமாக ஒரு சில பாடசாலைகள் திருந்திருந்தன பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தமையே காணக்கூடியதாக இருந்தன.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 200 குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ் மொழிமூலம் 53 பாடசாலைகளும் சிங்கள மொழி மூலம் 21 பாடசாலைகளுமாக மொத்தம். 74 பாடசாலைகள் இன்று திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு சில பாடசாலைகளில் அதிபரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களும் மாத்திரம் சமூகம் தந்திருந்ததுடன் இன்னும் சில பாடசாலைகளில் அதிபர் ஓரிரு ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தன.
எனினும் ஒரு சில பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை பொலிஸார் மாத்திரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனையும் காணக்கூடியதாக இருந்தன.
பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் சுகாதார வழி முறைகளுக்கு அமைய மிகவும் விருப்பத்துடன் பாடசாலைக்கு வருகை தருவதனை காணக்கூடியதாக இருந்தன. எனினும் ஆசிரியர்கள் வருகை தராததனால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களின் நலன் கருதி அதிபர்கள் வருகை தந்திருந்த போதிலும் அவர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடாது இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இன்று பாடசாலைகள் ஆரம்பிப்பதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் பொது சுகாதார பிரிவினர் மற்றும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அரசியல் பிரநிதிகள் பிரதேச செயலாகம் உட்பட பலர் இணைந்து நேற்று (20) துப்புறவு பணிகளில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது, இதே வேளை ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள தமிழ் சிங்கள 74 பாடசாலைகளில் 20 பாடசாலைகள் திறந்திருப்பதாக பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்.