கம்புருபிட்டி பகுதியில் இருந்து வந்த 19 வயது உடைய இளைஞர் ஒருவர் நேற்று இரவு நல்லதண்ணி பொலிசார் கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர் சிவனடி பாத மலைக்கு செல்லும் வழியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து அதன் உள்ளே இருந்த பெருமதிமிக்க பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வேளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் அந்த வியாபார நிலையத்தில் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்த போது இந்த கடை உடைப்பு சம்பவம் இடம்பெற்று உள்ளது.
உரிமையாளர் நேற்று இரவு ஒரு மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாகவும் அதனை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
செ.தி.பெருமாள்