சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்களுடன் வருகைத்தந்த இளைஞர்களுக்கு 129 ஆயிரம் தண்டம்
சிவனொளிபாதமலைக்கு கஞ்சா மற்றும் மதனமோதக போதை பொருட்களுடனௌ வந்த இளைஞர்கள் 60. பேருக்கு 129 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களையொட்டி அட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு வந்த யாத்திரிகளை அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போதே போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
அட்டன் பொலிஸ் கோரா மோப்பநாயின் உதவியுடன் கைது செய்யப்பட்ட வெளிமாவட்டத் சேர்ந்த மேற்படி சந்தேக நபர்கள் 06.03.2018 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்ற நீதவான் கே.சரவனராஜா தண்டம் விதித்து விடுதலை செய்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்