சிவனொளிபாதமலை சிவ ஈஸ்வர தேவஸ்தானத்தின் பீடாதிபதியும், மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான பிரதம குருவான தேசகீர்த்தி சிவசங்கர குருக்களின் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கையின் இறுதி தமிழ் மன்னன் சங்கிலியனின் 402வது நினைவு தினத்திற்காகவும், இலங்கை மக்களுக்காக கொரோனாவிலிந்து விடுபடுவதற்கான விசேட பூஜை சிவனொலிபாதமலை அடிவாரத்தில் இடம்பெற்றது.
மஸ்கெலியா சிவனடிபாதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவ ஈஸ்வர தேவஸ்தானத்தில் மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் ஏற்பாட்டில் கொரோனா விதிமுறைக்கு அமைவாக விசேட பூஜை 06.06.2021 அன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்