உலக பிரசித்தி பெற்ற சர்வமத வணக்கத்தலமான சிவனொளிபாதமலையினை தர்சிக்க சென்ற வெளிநாட்டு சுற்றுலா பிரயாணி ஒருவர் மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊசிஆறு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இன்று காலை 7.30 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக இறந்துள்ளதாகவும் இவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
இவரது சடலம் மேலதிக பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து வெளிநாட்டு தூதரகத்தின் ஊடாக அவது உறவினர்களுக்கு அறிவிப்பதக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்