2024-2025 ஆம் ஆண்டிற்கான சிவனொளிபாத மலை பருவகால உற்சவம் நாளை(14) ஆரம்பமாகவுள்ளது.
அந்தவகையில், இன்று(13) அதிகாலை பெல்மதுளை கல்பொத்ஹேன விகாரையில் வைக்கப்பட்டிருந்த புத்தபெருமானின் புனித ஆபரணங்களுடன் சுபவேளையில் நான்கு வழிகளில் கடும் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றது.
இரத்தினபுரி காவத்தை அவிசாவலை ஹட்டன் மஸ்கெலியா வீதியினூடாக ஊர்வலம் நல்லதண்ணியை சென்றடையும்.
இதேவேளை இரத்தினபுரி பலாபத்த வழியாகவும், குருவிட்ட ஹெரந்த வழியாகவும், பலாங்கொடை பொகவந்தலாவ நோர்வூட் வழியாகவும் நல்லதண்ணியை ஊர்வலம் சென்றடையும் .சுவாமிகள் செல்லும் போது வீதியில் பக்கங்களில் மக்கள் நின்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.