சிவனொளிபாதமலை யாத்திரை செய்து திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் ரிகாடன் பகுதியில் இன்று (17) திகதி 1.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கார் கொங்கிறீட் மின் கம்பத்தில் மோதூண்டதில் மின் கம்பம் வீதியின் குறுக்கே உடைந்து வீழ்ந்ததனால் அவ்வீதியூடான பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிப்புக்குள்ளாகியதுடன் சில பிரதேசங்களுக்கு பல மணித்தியாலங்கள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.
இந்த விபத்தில் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்