சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த மேலும் எட்டுப்பேர் கைது; கோரா” மோப்ப நாய் வேட்டை!

0
124

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 08 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் 03.03.2018 அன்று சனிக்கிழமை மாலை அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தொடக்கம் அட்டன் மல்லியப்பு வரையிலான பகுதிகளிலும், தியகல பகுதிகளிலும் 03.03.2018 அன்று சனிக்கிழமை மாலை பல வாகனங்களை தீடிரென அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போது வெவ்வேறு வாகனங்களில் பயணித்த எட்டு பேரிடமிருந்து கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து குறித்த எட்டு பேரையும் கைது செய்த அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here