போதைப் பொருட்கள் மற்றும் சிகரட்டுக்களுடன் சிவனொளிபாத மலைக்கு பயணித்த 34 பேருக்கு அட்டன் நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இதன்வடி அவர்களுக்கு 88 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அட்டன் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், 20 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்ட காலி, மாத்தறை, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.