“சிவப்பு பச்சை அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் தான் காரணம்

0
3

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குள் இலங்கை மக்கள் பாற்சோறு உண்பதற்கு இயன்ற அளவு வெள்ளை பச்சை அரிசியை வழங்குமாறு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் கேட்டுக் கொள்வதாக வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் நேற்று (02) இரவு ஒளிபரப்பான ‘சலகுன’ நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரியமாக நாட்டு மக்கள் பாற்சோற்றை சமைப்பதை எதிர்பார்ப்பது போன்று மக்களின் அந்த எதிர்பார்ப்பை எப்படியாவது நிறைவேற்றுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் சிவப்பு பச்சை அரிசிக்கு பூரண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டட்லி சிறிசேன, கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 20 கிலோ அரிசிக்கு மானியம் வழங்கியமையே இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்று 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டு மானியங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது இதனால் நாட்டில் சிவப்பு பச்சை அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here