சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 5:49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாங்சி கவுண்டியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகவும், 10 கிலோமீட்டர் ஆழம் குறைவாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது எட்டு வீடுகள் அழிக்கப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 7 பேர் வரையில் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




