உலகளாவிய ரீதியில் பல லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா தொற்றானது தற்போது உலகலாவிய ரீதியில் குறைவடைந்து வருகின்றது.இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் காரணமாக சீனாவின் செங்டு நகரம் மூடப்பட்டுள்ளது.
அந் நகரில் ஒரே நாளில் 156 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து சீன அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி, 21 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரின் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் தவிர ஏனைய அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு செய்திகளின்படி, செங்டு நகரத்தை மூடுவதற்கான முடிவு, அனைத்து நகரவாசிகளுக்கும் குறுகிய காலத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம் எடுக்கப்பட்டது.