சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 536 ஆம் ஆண்டில் தெற்கு லியாங் (Liang) வம்சத்தில் உள்ள ஃபெங்குவாங் (Fengguang) கட்டப்பட்டது.
கூடாரத்தின் கொன்கிரீட் சட்டகம் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், அனைத்தும் எரிந்து நாசமானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து சீன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.




