சீனாவில் மீண்டும் கொரோனா ருத்ர தாண்டவம்! – பல பகுதிகளில் கடும் ஊரடங்கு!

0
132

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது பல லட்சம் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் முழு முடக்கத்தால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தன.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல நாடுகளில் கொரோனா குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில தினங்களில் வெகுவாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சீனாவின் வடகிழக்கு நகரங்களில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் எல்லையோர மாகாணங்களான யான்ஜி மற்றும் ஷென்சென் மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here