நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து விவசாயத்திற்கு பாரிய அளவில் சேதம் விளைவித்துவருவதாகவும்; இந்த குரங்குகளை சீனா பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமச்சர் மஹிந்த அமரவீர அவர்கள்; அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறுபட்ட கருத்து வெளியாகின. இந் நிலையில் எமது நாட்டு குரங்குகள் நாடு கடத்துவது தொடர்பாக பொது மக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எமது நாட்டில் என்றுமில்லாதவாறு குரங்குகளின் பெருக்கம் அதிகரித்துள்ளுத. இதனால் இந்த குரங்குகள் விவசாயத்திற்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்தி வருகிறது. அது மாத்திரமின்றி குரங்குகள் வீடுகளுக்கு புகுந்த பொருட்களையும் சேதப்படுத்துகின்றன. இன்னும் சொல்ல போனால் வீடுகளின் கூரைகளுக்கும் சேதம் ஏற்படுத்துகின்றன.இதனால் அதிகமாக குரங்குகளை நாடு கடத்துவதனால் பாதிப்பில்லை.குரங்கின் பெருகத்திற்கும் சேதம் ஏற்படாது என ஒரு சிலர் தெரிவி;க்கின்றனர்.
இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கையில் சீனா என்ற நாடு குரங்குளை கொள்வனவு செய்கிறது என்றால் அது ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். காரணம் சீனா வெறுமனே ஆதயமில்லாமல் குரங்குகளை கொள்வனவு செய்யாது இதனால் குரங்குகளுக்கு உலக மக்களுக்கும் எந்தளவு பாதிப்பு ஏற்பட போகின்றது என்று ஆராய்ந்து பார்த்த பின்பே குரங்குகள் நாடு கடத்துவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.
என தெரிவித்தனர்.இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கையில் குரங்கு என்பது எமது நாட்டின் சொத்து இந்த வளம் காரணமாகத்தான் இந்த சூழல் அழகு பெறுகிறது.அது மாத்திரமன்றி சூழல் சமநிலை பேணுவதற்கும் இவை துனைபுரிகின்றன சுற்றலா பிரயாணிகளை கவர்வதற்கும் இந்த குரங்குகளும் ஒரு காரணமாக உள்ளன. இந்த குரங்குகளை நாடு கடத்துவதன் மூலம் எமது சுற்றுப்புற சூழல் பாதிக்கக்கூடும் அதே நேரம் இந்த நாட்டில் பிறந்த அனைத்து உயிர்யினங்களும் இந்த நாட்டில் தான் வாழ வேண்டும் இந்த குரங்குகளையும் அனுப்பிவிட்டால் எமது பிள்ளைகளுக்கு குரங்களை இன்டர்நெட்டில் தான் காட்ட வேண்டும் அதே நேரம் இயற்கையின் சாபத்திற்கு ஆளாகி இதை விட துன்பங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.
இது குறித்து இந்த மத தலைவர் இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளர் சிவ ஸ்ரீ சுரேஸ்வர சர்மா கருத்து தெரிவிக்கையில் இந்துக்களின் முக்கிய விலங்காக குரங்கினை கருதுகிறார்கள்,அதனை தெய்வாகவும் போற்றப்படுகிறது இந்துக்கள் ஆஞ்சநேயரின் வடிவமாகவே குரங்கினை பார்க்கின்றனர்.
இதிகாசத்தில் குரங்கு தெய்வங்களுக்கும் மனிதனுக்கும் உதவியதாக கூறப்படுகிறது தரமற்ற செயல் காரணமாக இலங்கையை வானரங்கள் அழித்ததாக வரலாறுகள் கூறுகின்றன.இதனால் இந்த குரங்குகளை கொண்டு சென்று கொன்று விட்டால் அதன் சாபமும் எமது நாட்டினை சும்மா விடாது விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றால் அதற்கு மாற்று வழிகளை கண்டு பிடிக்க வேண்டுமே தவிர இது தீர்வாகாது இன்று எமது நாட்டில் மிருக சட்டங்கள் மற்றும் ஜீவ காருணியம் போன்றன அமுலில் உள்ளன எனவே இது குறித்து அரசாங்கம் பல தடைவைகள் சிந்தித்து ஆராய்ந்த முடிவெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்