சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் சுமார் 8000 ஆயிரம் பேர் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நோய் பாதிப்பின் வேகம் கவலையை ஏற்படுத்துவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுகுறித்து வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரத்தில் மட்டுமே சுமார் 3000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மாகாண ரீதியில் எண்ணிக்கையை ஆபத்தான அளவுக்குக் கொண்டு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குவாங்டாங் மாகாணத்தில் சுமார் 12 நகரங்களும் தொற்றுநோயை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந் நோய் பரம்பலை விரைவாக கட்டுப்படுத்த வீடுகளுக்கருகில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 10,000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது