சீனா உளவு பார்ப்பதை இங்கிலாந்து பொறுத்துக்கொள்ளாது – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

0
89

இங்கிலாந்து இறையாண்மை விவகாரங்களில் தலையிடும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு அமைச்சர் டான் ஜோர்விஸ் தெரிவித்துள்ளார்.

சீன உளவாளிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து எம்ஐ5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசியலில் பணிபுரியும் தனிநபர்களை இலக்கு வைத்து சீனா சார்பில் உளவு பார்க்கும் நோக்கில் இணைய இணைப்புகள் அனுப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்தில் உள்ள சீன தூதுரகம் முற்றிலும் மறுத்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தூதுரகத்தின் செய்தி தொடர்பாளர், உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுமையான கட்டுக்கதை எனவும், இது இங்கிலாந்து தபரப்பில் “சுயமாக உருவாக்கப்பட்ட நாடகம்” என்றும் குற்றம் சாட்டினார்.

“இங்கிலாந்து தரப்பின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தவறான பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்வதை நிறுத்த வேண்டும்” என்று அவர் இங்கிலாந்து தரப்பை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here