சீனியினை பெற்றுக்கொள்வதற்காக மலையக நகரங்களில் உள்ள ஒரு சில சத்தோச நிலையங்களில் தொழிலாளர்கள் முண்டியடித்து சீனியினை பெற்றுக்கொள்வதாகவும் ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மாத்திரம் தான் தருவதாகவும் இதனை பெறுவதற்காக பெரும் தொகை செலவு செய்து சத்தோச நிலையங்களுக்கு வரவேண்டி உள்ளதாகவும் தொழிலாளகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட சீனித்தட்டுப்பாட்டினையடுத்து மலையகத்தில் உள்ள தனியார் வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ சீனி 230 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ள கூடிய நிலை காணப்பட்டது. இதன் காரணமாக மலையக பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் இந்நிலையில் அரசாங்கம் சீனியினை சத்தோச ஊடாக நிர்னைய சிலையில் பெற்றுக்கொடுக்கப்பட்டதனையடுத்து மலையக நாரங்களில் உள்ள சத்தோச நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலான தோட்டத்தொழிலாளர் தங்களது பிரதேசங்களில் சத்தோச விற்பனை நிலையம் இல்லாததன் காரணமாக தூர பிரதேசங்களிலிருந்து ஊரடங்கு அமுலில் உள்ளதனால் கூலி வாகனங்களை எடுத்துக்கொண்டு ஒரு கிலோ சீனியினை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடைவை சீனியினை பெற வரவேண்டியுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே ஏதோ ஒரு வழியில் தங்களது பிரதேசங்களிலேயே சீனியினை பெற்றுக்கொள்வதற்கு வழி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் சத்தோச கிளைகளை தங்களுடைய பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என இவர்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்