சீன உரத்தால் இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து!

0
154

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக்கூறப்படும் உரத்தின் மாதிரிகளில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இதை தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரம் எனக் கூறப்படும் உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயமான இரு பபக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பக்றீரியாக்கள் பாரதூரமான நோய்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதோடு, அவற்றால் ஏற்படக்கூடிய நோய்க்கு மருந்தும் கிடையாது.

இவ்வாறான 95 000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்படவிருந்ததோடு இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்படவிருந்தது என்றார்.

#இலங்கை #சீனா #செய்தி #தமிழ்ச்செய்தி #இயற்கைஉரம் #இறக்குமதி #Srilankatamilnews

செய்திகளை உடனுக்குடன் WhatsAppஇல் பெற இணையுங்கள்!
https://chat.whatsapp.com/H0uNDF9xnUYKjgLtC0b5o5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here