சீனா – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் விமான கூட்டுச் செயற்பாடு போன்றவற்றை விரிவுபடுத்துவதாக மீண்டும் ஒப்புதல் பெற்றுள்ளன. குறிப்பாக இரு நாடுகளினதும் அனைத்து வானிலை மூலோபாய கூட்டுறவு கூட்டாட்சி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரூடே என்ற ஆங்கில நாளிதல் இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது
ஜே -10 மற்றும் ஜே.எஃப் -17 போர் விமானங்களின் ஆற்றல், பாகிஸ்தான் விமானப்படையின் போர் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான போர் நிறுத்தத்திலிருந்து 128 வது நாளில், அரசியலமைப்பு ரீதியாக ஆயுதப் படைகளின் அதி உயர் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி சர்தாரி, சீனாவின் விமானத் தொழில்துறை கழகத்தை பார்வையிட்டார், சீனாவின் முதன்மை விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஒரு பரந்த அளவிலான இராணுவ மற்றும் பொதுமக்கள் விமானங்களை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாகவும், பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த மூலோபாய கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகவும் இரு நாடுகளினதும் பாதுகாப்பு முறைமைகள் அமைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அயல் நாடான இந்திய அரசின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் போன்ற பல விடயங்களில், சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான மூலோபாய செயல் முறைகளில் கூட்டினைந்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மேலும் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை சீன – பாகிஸ்தான் இராணுவ கூட்டு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பலவற்றிலும் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளதாகவும், இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு உயர் மட்ட அதிகாரிகள் சந்தித்து பேசி வருவதாகவும் பாகிஸ்தான் ரூடே வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.