ஒவ்வொரு மனிதரும் குறைந்தது 3 லிட்டர் அளவாவது தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த நீரை நீங்கள் கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதின் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் நீங்கள் தினமும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவிட்டு பிறகு ஆற வைத்த நீரை குடிப்பதின் மூலம் என்னென்ன மாற்றங்கள் உங்களுக்குள் ஏற்படுகிறது. அதனால் நடக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள்
தினமும் ஜீரகத் தண்ணீரை குடிப்பதின் மூலம் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு இது உதவி செய்கிறது. மேலும் உங்களுக்கு ஏற்படக்கூடிய இதய நோய்களின் தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாக்க எந்த சீரக தண்ணீர் பெருமளவு பயன்படுகிறது.
அகத்தை சீராக்குவதால் சீரகம் என்ற பெயர் பெற்ற இந்த சீரகம் உங்கள் செரிமான பிரச்சனைக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பல ஆய்வுகள் சீரகத்தில் இருக்கக்கூடிய சில வேதிப்பொருட்கள் செரிமான நொதிகளை கொண்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும் செரிமானத்தை அதிகரிக்க உதவி செய்வதால் ஜீரண சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் ஜீரண மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த செய்து சீரகத்திற்கு உள்ளது.
பெண்களுக்கு தேவையான அபரிமிதமான இரும்பு சத்து நிறைந்த சீரகத் தண்ணீரில் 13 மடங்கு இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களில் இருப்பதை விட அதிக அளவு இருப்பதால் உங்களுக்கு ஏற்படும் இரும்பு பற்றாக்குறையை சரிசெய்ய மிகச் சரியான சாய்ஸ் சீரகம் தான்.
நோய் எதிப்பு சக்தியை அதிகரித்து அதன் மூலம் நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க போதுமான அளவு ஆற்றலை அளிக்கக்கூடிய அற்புத சக்தி படைத்தது சீரகம்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவு உறங்குவதற்கு முன்பு சீரகத் தண்ணீரை குடிப்பதின் மூலம் இரவு உறக்கம் உங்களுக்கு நிம்மதியாக கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் மூளைக்கு புத்துணர்வு தரக்கூடிய பணியை மிக நேர்த்தியான முறையில் சீரகம் செய்கிறது.
எனவே மேற்கூறிய நன்மைகளை கருத்தில் கொண்டு நீங்கள் வாரத்தில் ஒரு நாளாவது சீரகத் தண்ணீரை குடிப்பதை வழக்கமாகக் கொண்டால் பல்விதமான நன்மைகளை பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.