நுவரெலியா,நானுஓயா கந்தப்பளை,மற்றும் ராகலை ஆகிய பிரதேசங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எஸ்கடேல் சந்திரகாந்தி தோட்டத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பசு மாடொன்று உயிரிழந்துள்ளது.
இதன்போது பிரதான வீதியில் சென்ற முச்சக்கர வண்டி மீது அதன் கிளைகள் சாய்ந்ததில் விபத்தொன்றும் சம்பவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
டி சந்ரு



