சீருடை விநியோகத்தை நிறைவு செய்ய நடவடிக்கை

0
114

எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தை எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைத் துணிகள், வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை சீருடைத்துணிக்கான தேவை 1 கோடியே 26 இலட்சத்து 94 ஆயிரம் மீட்டராக காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here