சுகவீன தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை, அதிகமான ஆசிரியர்கள் தெரிவிப்பு!!

0
208

26ந் திகதி நடைபெறவுள்ள அரசியல் பழிவாங்கல் நியமங்களுக்கு எதிராக நடைபெறப்போகும் கூட்டுத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு அதிகமான மலையக ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென தெரிவித்துள்ளனர்.

இன்று ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து மனரீதியான உளைச்சளுக்கு ஆளாகி பலர் மனநோயாளிகளாக மாறிவரும் நிலையில் அவற்றுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாது மிகவும் அற்பசொற்ப விடயங்களுக்காக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வது கேளிக்கூத்தாகுமென பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று ஆசிரியர்கள் பாடசாலை விட்ட பின்னும் விடுமுறைத்தினங்களிலும் சேவைசெய்யப்பட வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இதற்காக மேலதிக கொடுப்பனவுகளோ வேறு எந்த சலுகைகளோ வழங்கப்படுவதில்லை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுடன் கல்விசாரா கோவை செயற்பாடுகள் , தரவுகள் , கோவை முகாமைத்துவம் உட்பட பல்வேறு செயற்பாடுகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த எந்தவொரு செயற்பாட்டுக்களுக்கும் இவர்களுக்கு எவ்விதமான மேலதிக கொடுப்பனவுகளும் கொடுக்கப்படுவதில்லை அது மாத்திரமின்றி தமிழ்தினப்போட்டிகள் சித்திரப்போட்டிகள் என இதர செயற்பாடுகளுக்கும் மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக தங்களுடைய சொந்தப்பணத்தினையே செலவழித்துச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆதற்காக பாடசாலையிலோ கல்வித்திணைக்களங்களிலோ கொடுப்பனவுகள் கொடுக்கப்படுவதில்லை அத்தோடு தரவட்டம் , செயலமர்வு போன்றவற்றில் பங்குகொள்ளும் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கொடுப்பனவும் இன்றியே இவற்றை செய்ய ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் ஒருசிலர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் அதிகமான ஆசிரியர்களுக்கு பலவருடகாலமாக நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை இது தொடர்பாக கல்விக் காரியாலயங்களிடம் வினவினால் காசு வந்தால் போடுகின்றோம் என காலம் கடத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் வருடாந்த சம்பள உயர்வு படிவம் கூட குறித்த நேரத்தில் வழங்கப்படுவதில்லை முறையான இடம்மாற்றம் இடர்கால கடன் , விபத்தின் போது நஷ்ட ஈடு இவை ஏதும் கிடைக்காத நிலையில் இதை ஒன்றை மாத்திரம் தூக்கிப்பிடித்துக்கொண்டு போராட்டம் மேற்கொள்வது மிகவும் நகைப்புக்குரியது எனவும் அத்தோடு கடந்த காலங்களில் அதிபர் , உதவி அதிபர் , உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் , பணிப்பாளர்கள் என பலரும் பதவிவகுத்துவிட்டு தற்போது இதற்கு எதிராக செயற்படுவது எந்த வகையில் நியாயமானது என ஆசிரியர்கள் கேள்வியெழுப்புகின்றனர். எனவே இது போன்று அரசியல் செயற்பாட்டுக்காகவும் தங்களுடைய சொந்த நிகழ்ச்சி நிரலுக்காகவும் தொழிற்சங்கப்போராட்டங்களை முன்னெடுக்காது உண்மையான ஆசிரியர் பிரச்சினைகளை இணங்கண்டு அவற்றை முற்றுமுழுவதாக தீரக்கும் வகையில் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க தொழிற்சங்கவாதிகள் முன்வர வேண்டுமெனவும் அதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் நடுநிலைமையாக இன்றி ஒத்துழைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here