AL பரீட்சைப் பெறுபேறுகளை சுட்டெண் உடன் முகநூலில் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவிட வேண்டாம் என பேராசிரியர் சம்பத் அமரதுங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…….
இதனால் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அவதானம் நிலவுவதாக அவர் தெரிவிக்கிறார்….
பரீட்சை பெறுபேற்று அட்டையிலுள்ளசுட்டெண் ஒன்றுக்கு வேறொரு அடையாள அட்டையின் இலக்கத்தைத் தொடர்புபடுத்தி பல்கலைக்கழக அனுமதிக்காக இன்னொருவருக்கு விண்ணப்பிக்க முடியும் இதனால் சுட்டெண்ணுக்கு உரிய உண்மையான பெறுபேற்றை பெற்றுக் கொண்டவர் பாதிக்கப்படுவார் என அவர் கூறுகிறார்..
இவ்விடயத்தில் உண்மையான பரீட்சார்த்திக்கு உரிய இடம் கிடைக்காது போகாது என்றாலும் பெறுபேற்றின் உறுதிப்பாட்டினை உறுதி செய்ய மாணவர்கள் அநாவசியமான கஷ்டங்களை எதிர் நோக்க வேண்டி வரும் எனவும் அவர் கூறுகிறார்.