சுதந்திர தினத்தன்று நுவரெலியாவில் கணிணி கல்வி மையம் திறந்து வைப்பு.

0
140

இனியாவது நமக்காக நாம் அமைப்பின் தலைவர் ஆறுமுகம் சுதர்ஷன் தலைமையின் கீழ் 04/02/2022 சுதந்திர தினத்தன்று தோட்டபுற சிறுவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு கணிணி கல்வி மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒலிபன்ட் தோட்டத்தில் முதல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் இனியாவது நமக்காக நாம் குழுவின் தலைவர் ஆறுமுகன் சுதர்ஷன் தெரிவிக்கையில் எதிர்காலத்தில் கல்வி அனைத்தும் ஒன்லைன் மூலம் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அதேபோல தோட்டப்புறங்களில் ஒவ்வொரு மாணவரும் கணிணி அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவே அடுத்தடுத்த கட்டங்களில் நுவரெலியா மாவட்டம் உட்பட முழு மலையகத்திலும் கட்டம் கட்டமாக கணிணி கல்வி மையத்தை அமைக்க இனியாவது நமக்காக நாம் அமைப்பு செயற்படும் முதல்கட்டமாக ஒலிபன்ட் தோட்டத்தில் அருகிலுள்ள  மூன்று தோட்ட மாணர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படுகின்றது எதிர்காலத்தில் முழு மலையகத்திலும் அமைப்பதே நோக்கம் என குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here